Friday, June 7, 2019

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

https://gurukulamas.blogspot.com/2019/06/50.htmlகோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணிகள், தமிழ்நாடு அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 83
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: நகல் படிப்பவர், நகல் பரிசோதகர்
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: காவலர், இரவுக்காவலர், மசால்ச்சி மற்றும் இரவுக்காவலர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: துப்புரவுப் பணியாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: பெருக்குபவர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: மசால்ச்சி
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோயமுத்தூர் 641018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20NO%2001%20of%202019_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2019

Thursday, September 14, 2017

தனியார் பள்ளி ஆசிரியருக்கு தகுதி தேர்வில் விலக்கு?


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவோருக்கு, மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 2019க்குள் படிப்பை முடிக்கவும், கெடு விதிக்கப் பட்டுள்ளது.

அவகாசம் : மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளி ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டப்படி, தனியார் பள்ளி ஆசிரியர் கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, 2009ல், ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது; அது, 2014ல் முடிந்தது. பின் மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், 2019க்குள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, 8ம் வகுப்பு வரையான, தனியார் பள்ளிகளில் பணிபுரியும், பட்டம் மற்றும் டிப்ளமா முடித்த ஆசிரியர்களுக்கு, சிறப்பு தொடக்க கல்வி டிப்ளமா படிப்பையும், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

அனுபவம் : இந்த படிப்பை, என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தநிலை பள்ளி யில், தொலைநிலை கல்வி யாக, இரண்டு ஆண்டு படிக்கலாம். இதற்கான பதிவு, செப்., 15ல் முடிவதாகவும், அதற்குள் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளி நிர்வாக சங்க தலைவர், ஜே.மார்ட்டின் கென்னடி கூறியதாவது: தனியார் பள்ளிகளில், பல ஆண்டு அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை, வெறும் தகுதித் தேர்வுக்காக, பணியில் இருந்து அனுப்ப முடியாது. எனவே, அவர்கள் பணியில் தொடரும் வகை யில், மத்திய அரசு, இந்த படிப்பை அறிமுகம் செய்து உள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, September 6, 2017

ஜாக்டோ-ஜியோ அமைப்பு - போராட்டம் ஒத்திவைப்பு

ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைப்பு- ஜாக்டோ-ஜியோ நிர்வாகி இளங்கோவன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
இதனிடையே செப். 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் முதல்வர் பழனிசாமி ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அக்டோபர் 15- ம் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ நிர்வாகி இளங்கோவன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

வரலாற்றில் இன்று 06.09.2017

வரலாற்றில் இன்று 06.09.2017

நிகழ்வுகள்

1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.
1776 – கரிபியன் தீவான குவாதலூப்பேயை சூறாவளி தாக்கியதில் 6000 பேர் கொல்லப்பட்டனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியின் படூக்கா நகரைக் கைப்பற்றினர்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் தென் கரோலினாவின் மொரிஸ் தீவில் இருந்து விலகினர்.
1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.
1885 – கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.
1901 – அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
1930 – ஆர்ஜெண்டீனாவின் அதிபர் ஹிப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1936 – கடைசி தாஸ்மானியப் புலி தாஸ்மானியா, ஹோபார்ட்டில் இறந்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: தென்னாபிரிக்கா ஜேர்மனியுடன் போரை அறிவித்தது.
1946 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1932 – கனடாவின் முதலாவது தொலைக்காட்சி நிலையம், CBFT-TV, மொன்ட்றியாலில் திறக்கப்பட்டது.
1951 – தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.
1955 – துருக்கியில் இஸ்தான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாகிஸ்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.
1966 – தென்னாபிரிக்க பிரதமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் நாடாளுமன்ற அமர்வின் போது குத்திக் கொலை செய்யப்பட்டார்.
1968 – சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1970 – ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
1991 – ரஷ்யாவின் லெனின்கிராட் நகரம் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1997 – வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.
2006 – ஐரோப்பியத் தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.

பிறப்புக்கள்

1968 – சாயிட் அன்வர், பாகிஸ்தானின் துடுப்பாளர்

இறப்புகள்

1998 – அகிரா குரோசாவா, ஜப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1910)
2007 – லூசியானோ பவரொட்டி, இத்தாலியப் பாடகர் (1935)

சிறப்பு நாள்

பல்கேரியா – இணைப்பு நாள் (1885)
பாகிஸ்தான் – பாதுகாப்பு நாள்
சுவாசிலாந்து – விடுதலை நாள் (1968)

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

https://gurukulamas.blogspot.com/2019/06/50.html கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணிகள், தமிழ்நாடு அடிப்பட...